130 தலைப்புகளில் பழைய பாடநூல்கள்; 50% தள்ளுபடியில் விற்பனை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

130 தலைப்புகளில் பழைய பாடநூல்கள்; 50% தள்ளுபடியில் விற்பனை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள பழைய பாடநூல்கள் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ''தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள முதுநிலை, பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான பழைய பாடநூல்கள் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

குறிப்பாகக் கல்வியியல், சிறப்புக் கல்வியியல், வரலாறு, பொருளாதாரம், தகவல் தொடர்புத் திறன்கள், ஆடை வடிவமைப்பு, கற்பித்தல் நுட்பங்கள், கணினித் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, ஆட்சித் தமிழ் உள்ளிட்ட 130 தலைப்புகளில் உள்ள பாடநூல்கள் விற்பனைக்கு உள்ளன. இந்நூல்கள் அனைத்தும் கற்றலில் ஆர்வமும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதில் முனைப்பும் உள்ள அனைவருக்கும் பயன்படக்கூடிய நூல்களாகும்.

விற்பனைக்கு உள்ள நூல்களின் முழு விவரங்களை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்னும்
இணையதளப் பக்கத்தில் காணலாம்.

இந்நூல்களை நேரடியாக வாங்க நினைப்போர், சென்னை, சைதாப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பாடநூல் தயாரிப்பு மற்றும் வழங்கல் பிரிவிற்கு தந்து, ‘TAMILNADU OPEN UNIVERSITY, CHENNAI’ என்னும்
பெயரில் டிடி அளித்து நூல்களை 50% தள்ளுபடி விலையில் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: 044-24350844 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in