Published : 26 Aug 2020 02:25 PM
Last Updated : 26 Aug 2020 02:25 PM

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேசியத் தேர்வுகள் முகமை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான நீட் ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. எனினும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் நுழைவுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்நிலையில் நீட் தேர்வு, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது. கரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்குத் தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேசியத் தேர்வுகள் முகமை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரிசை எண், தேர்வு மைய எண், முகவரி, கேள்வித் தாள் மீடியம், நுழைவு நேரம், தேர்வு மைய கேட் மூடப்படும் நேரம் ஆகியவை ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

https://ntaneet.nic.in/ntaneet/AdmitCard/AdmitCard.html என்ற இணைய முகவரியைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: neet@nta.ac.in

தொலைபேசி எண்கள்: 8287471852, 8178359845, 9650173668, 9599676953 மற்றும் 8882356803.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x