Published : 22 Aug 2020 07:12 AM
Last Updated : 22 Aug 2020 07:12 AM

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆக.24 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

கோப்புப் படம்

சென்னை

கால்நடை மருத்துவப் படிப்புக்குவரும் 24-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு பட்டப்படிப்பு (பிவிஎஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் (பி.டெக்) உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 2020-21-ம் ஆண்டு சேர்க்கைக்கு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

என்ஆர்ஐ மாணவர்கள் அக்.23-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x