பிடிஎஃப், புத்தகம், ஒலி வடிவில் என்சிஇஆர்டி புத்தகங்கள்: அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு

பிடிஎஃப், புத்தகம், ஒலி வடிவில் என்சிஇஆர்டி புத்தகங்கள்: அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு
Updated on
1 min read

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வெவ்வேறு விதங்களில் என்சிஇஆர்டி புத்தகங்களுக்கான ஆன்லைன் இணைப்பை மத்தியக் கல்வித்துறை அமைச்சர் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

கரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையன்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் இணைய வழியில் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இதனால் ஆன்லைன் கல்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் என்சிஇஆர்டி புத்தகங்கள் பிடிஎஃப், புத்தகம், ஆடியோ எனப் பல்வேறு வடிவங்களில் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''மாணவர்களே, புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டிய காலங்கள் போய்விட்டது. என்சிஇஆர்டி உடன் இணைந்து உங்களுடைய பாடப்புத்தகங்களை ஆன்லைனில் இ-புத்தகங்கள் மூலமாக இலவசமாகப் படிக்கலாம்.

பாடப் புத்தகங்கள் தற்போது ஒலி வடிவிலும் கிடைக்கின்றன ''என்று தெரிவித்துள்ளார்.

இ-புத்தகங்களுக்கான இணைப்பு: https://ncert.nic.in/ebooks.php

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in