Last Updated : 19 Aug, 2020 07:00 PM

 

Published : 19 Aug 2020 07:00 PM
Last Updated : 19 Aug 2020 07:00 PM

பகுதி நேர பி.இ. படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை: ஆக.30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

காரைக்குடி

‘‘பகுதி நேர பி.இ., பி.டெக். படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு ஆக.30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்,’’ என காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி (கணிதம்) முடித்தவர்கள் பி.இ, பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம். தமிழகம் முழுவதும் உள்ள 465-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கைக்கு என 10 சதவீத இடங்கள் என 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் கரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலம் ஆக.10-ம் தேதி முதல் ஆக.30-ம் தேதி பெறப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் தங்களின் மொபைல் எண், இ-மெயில் உதவியுடன் பதிவு செய்து விண்ணபங்களை சமர்ப்பிக்கலாம். முன்பு மாணவர்களை நேரில் வரவலைத்து கவுன்சலிங் நடந்தது. தற்போது கரோனா பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாக்க முதல் முறையாக இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் 5-வது செமஸ்டர் வரை உள்ள மதிப்பெண் விவரங்களை சமர்ப்பித்தால் போதுமானது. இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து அரசு முடிவு செய்த பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் கடைசி செமஸ்டர் மதிப்பெண் பதிவுடலாம்.

விண்ணப்ப பதிவு மற்றும் கவுன்சலிங்க்கு www.acgcetlea.com , www.tnlea.com என்ற இணையதளங்களை பார்வையிடலாம். விண்ணப்பம் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் இணையதளத்தில் வீடியோ வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதி செமஸ்டர் பற்றிய விவரம் கிடைத்தவுடன் அடுத்த கட்டத்திற்கான வழிமுறைகள் மற்றும் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும் டிப்ளமோ முடித்து இரண்டாண்டுகள் பணி அனுபவம் உடையவர்கள் பகுதி நேர பி.இ., பி.டெக் படிப்பில் சேரலாம். அவர்களுக்கான சேர்க்கை கோவை சிஐடி தொழில்நுட்ப கல்லூரி வாயிலாக நடக்கிறது. விண்ணப்பங்களை www.ptbe.tnea.com என்ற இணையதளம் மூலம் ஆக.30-ம் தேதி வரை பதிவு செய்யலாம். இணைய வசதி இல்லாதோர் அருகேயுள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x