Published : 17 Aug 2020 07:12 AM
Last Updated : 17 Aug 2020 07:12 AM

எய்ம், நீர் இணையம் இணைந்து நடத்திய இணையவழி கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர்கள் விவரம் வெளியீடு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நீர் வளம் காக்கும் சிந்தனையை வளர்க்கும் நோக்கில் எய்ம், நீர் இணையம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நீரின் தேவையை உணரும் வகையிலும், நீர் சேமிப்பு, நீர் பாசனம், நீர் நிலைபாதுகாப்பு முறைகளைப் பற்றியசிந்தனைகளை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கிலும் இந்தக்கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

1,320 மாணவர்கள் பங்கேற்பு

‘நீர் வளம் காக்கும் நெறிகளில் புதுமை சிந்தனைகள்’ எனும் தலைப்பிலான இக்கட்டுரைப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் இலங்கை, கனடா போன்ற நாடுகளிலிருந்தும் 1,320 பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் இப்போட்டியில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஓய்வுபெற்ற பொறியாளர் ஏ.நாகராசு, கே.டி.பெருமாள், யு.பூவலிங்கம், கே.ஆரோக்கியசாமி, ஜி.சசிதரன், சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழு, கட்டுரைகளை மதிப்பீடு செய்து, 116 கட்டுரைகளை பரிசுக்குரிய கட்டுரைகளாகத் தேர்வு செய்துள்ளது.

வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் www.aimngo.com, www.neerinaiyam.org ஆகியஇணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாக சான்றிதழ்கள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் aimngocbe@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம் என்று எய்ம் தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் பி.ஏ.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x