Published : 14 Aug 2020 07:02 AM
Last Updated : 14 Aug 2020 07:02 AM

வேறு மாவட்ட பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழை காட்டி இ-பாஸ் பெறலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழை சமர்பித்து, இ-பாஸ் பெற்றுக் கொள் ளலாம் என அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஈரோடு மாவட் டம் கோபியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேற்று கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக் கும் பாடப் புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை, 11 தனியார் தொலைக்காட்சிகள் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப் படுகிறது. தினமும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை பாடம் நடத்தப்படுகிறது. மாநிலம் முழு வதும் உள்ள 6,019 பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்காக இணையதள வசதியுடன் நவீன லேப் அமைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் வரும் 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். 10-ம் வகுப்பு மாண வர்கள் 24-ம் தேதி பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு மாவட்ட பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள், மாற்றுச் சான்றிதழ்களை காண்பித்து இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்.

கியூஆர் கோடு

கரோனா ஊரடங்கு காலத் திலும், மாணவர்கள் வீட்டில் இருந்தபடி பாடம் கற்க ஏதுவாக புத்தகங்களில் கியூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x