புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்
Updated on
1 min read

புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் (ஆக. 11) விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கின.

இதற்கு கல்வித் துறை இணைய தளத்தில் இருந்தோ, பள்ளிகளில் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றோ, பூர்த்தி செய்து வரும் 20-ம் தேதிக்குள் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். புதுச்சேரி, காரைக்காலில் மாணவர் எந்த அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர விரும்புகிறாரோ, அந்த அரசுப் பள்ளியில் விண்ணப்பத்தினை பெறலாம். ஒருவர் எத்தனை பள்ளிகளில் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் 20-ம் தேதிக்குள் அந்தந்தப் பள்ளிகளில் தர வேண்டும். விண்ணப்பத்துடன் இணையதள மதிப்பெண் சான்று நகல், குடியிருப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றுகள், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு இடஒதுக்கீடுக்கான சான்றிதழ் இருந்தால் அதையும் இணைத்துத் தரவேண்டும்.

கரோனா காலமாக இருப்பதால் குடியிருப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களின் பழைய நகல்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தினை www.schooledn.py.gov.in என்ற பள்ளிக் கல்வித்துறை இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து வரும் 28-ம் தேதியன்று தரவரிசைப் பட்டியல் வெளியாகும். வரும் 31-ம் தேதி முதல் 11-ம் வகுப்பு சேர்க்கை அந்தந்தப் பள்ளிகளில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in