இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு
Updated on
1 min read

கடந்த ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து தொற்று இல்லாததால் இலங்கையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதத்தின் மத்தியில் இலங்கையில் கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அங்குள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்நிலையில், சமூகத் தொற்று ஏற்படாத நிலையில், புதிய தொற்று எதுவும் கண்டறியப்படாத சூழலில் ஜூலை மாதத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கரோனாவால் இரண்டாம் அலை உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கல்வித்துறைச் செயலர் சித்ராநந்தா கூறும்போது, ’அனைத்துப் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன’ என்றார்.

அதே நேரம் பள்ளிகளில் தனிமனித இடைவெளிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 200-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் முன்புபோல் இயங்கலாம். ஆனால் 1 மீட்டர் இடைவெளி என்ற விதியின் அடிப்படையில் பள்ளிகளுக்கு வர வேண்டும். 200-க்கும் மேற்பட்டமாணவர்களைக் கொண்ட பள்ளிகள், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது கடினம் என்பதால், எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்தத் தேதிகளில் வகுப்புக்கு வரலாம் என்று முடிவெடுத்துச் செயல்படலாம்.

கோவிட் 19 தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் வரை பள்ளி உணவகங்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கரோனா அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in