

மதிப்பெண் குறைந்ததாக கருதும் எஸ்எஸ்எல்சி மாணவர்கள், பள்ளிகள் மூலமாக குறைதீர்க்கும் மனு அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவீதமும் கணக்கிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கான மதிப் பெண் நேற்று காலை அறிவிக் கப்பட்டன. அரசுத் தேர்வுகள் துறை அனுப்பிய குறுந்தகவல், இணையதளம் மற்றும் பள்ளி களுக்கு அனுப்பப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆகியவற் றில் மாணவர்கள் தங்களது மதிப் பெண்களை அறிந்து கொண்டனர்.
பல இடங்களில் மாணவ, மாணவிகள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்று கூறி கண் கலங்கினர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
மாணவர்கள் சிலர் கூறும் போது, ‘பொதுத்தேர்வை எதிர்கொள்வ தற்காக இரவு, பகல் பாராமல் படித்தோம். டியூஷனுக்கும் சென்று படித்தோம். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளைக் காட்டிலும், இறுதியாக நடைபெறும் பொதுத்தேர்வில்தான் அதிகம் கவனம் செலுத்துவோம். கரோனாஅச்சத்தில் இருந்த எங்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது நிம்மதி அளித்தாலும், மறுபுறம் மதிப்பெண் குறித்த கவலையே மேலோங்கி நின்றது. நாங்கள் நினைத்ததுபோலவே மதிப்பெண் குறைந்துவிட்டது’ என்றனர்.
இதுகுறித்து கோவை மாவட்டகல்வித் துறையினரிடம் கேட்டபோது, ‘ஒவ்வோர் ஆண்டும்பொதுத்தேர்வு முடிவு வெளியா னதும் மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதும்மாணவர்களிடம் இருந்து மறுகூட் டல் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். இம்முறை மதிப் பெண் குறைவாக இருப்பதாகக் கருதும் மாணவர்கள் வரும் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை,அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட் டுள்ள குறை தீர்க்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள். பின்னர்அந்த படிவங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மூலமாக முடிவுகள் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்’ என்றனர்.