

10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 10,742 தனித் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, தனித் தேர்வர்களின் நிலை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதிலும், தனித் தேர்வர்களின் நிலை குறித்து எதுவும் கூறப் படவில்லை.
இதுகுறித்து அரசு தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண், வருகைப் பதிவு அடிப்படையிலேயே பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றனர்.