Last Updated : 10 Aug, 2020 12:57 PM

 

Published : 10 Aug 2020 12:57 PM
Last Updated : 10 Aug 2020 12:57 PM

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: திருச்சி மாவட்டத்தில் 133 பேர் கணிதப் பாடத்தில் முழு மதிப்பெண்

பிரதிநிதித்துவப் படம்.

திருச்சி

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின்படி, திருச்சி மாவட்டத்தில் 133 பேர் கணிதப் பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே உடல்நிலை, மருத்துவ விடுப்பு மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாணவர்கள் தங்களின் பருவத் தேர்வுகளை எழுதவில்லை. அதேபோல, ஏராளமான மாணவர்கள் பருவத் தேர்வுகளின் சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வில் தேர்ச்சி அளிக்கப்படாது என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மதிப்பெண் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று (ஆக.10) வெளியிட்டது. இதில், பருவத் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கும் தேர்ச்சி அளித்து, 10-ம் வகுப்பில் 100 சதவீதத் தேர்ச்சியைப் பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் 455 பள்ளிகளில் 10-ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் 17 ஆயிரத்து 714 பேர், மாணவிகள் 17 ஆயிரத்து 825 பேர் என 35 ஆயிரத்து 539 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியாக திருச்சி மாவட்டத்தில் தமிழில் 9 பேர், ஆங்கிலத்தில் 5 பேர், கணிதத்தில் 133 பேர், அறிவியலில் 127 பேர், சமூக அறிவியலில் 60 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x