Published : 09 Aug 2020 09:08 AM
Last Updated : 09 Aug 2020 09:08 AM

வருங்காலத்தில் அனைத்து துறைகளும் மின்னணு மயமாகும்; எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தகவல்

சென்னை

எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படிப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக் கிறது என்று ‘இந்து தமிழ் திசை’ நாளித ழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர் கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி யில் துறை நிபுணர்கள் கூறினர்.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவி கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர் வுக்கு உயர்கல்வி’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை இணையத்தில் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர் கள் உரையாற்றுகின்றனர். உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கின்றனர்.

அந்த வகையில், கடந்த 6-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், சுற்றுச்சூழல் (என்விரான்மென்டல்) இன்ஜினீயரிங் குறித்து நிபுணர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் எஸ்.கண்மணி: புவி வெப்பமடைதல், பருவநிலை மாறுபாடு என உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் பொறியியல் (என்விரான்மென்டல் இன்ஜினீயரிங்) என 2 நிலைகளில் சுற்றுச்சூழல் தொடர்பான படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பி.இ., பி.டெக். (என்விரான்மென்டல் இன்ஜினீயரிங்), பி.எஸ்சி. (என்விரான்மென்டல் சயின்ஸ்) ஆகிய படிப்புகளில் சேரலாம்.

மேற்படிப்பை பொருத்தவரை, என்விரான்மென்டல் இன்ஜினீயரிங்கில் எம்.இ., எம்.டெக்., என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட்டில் எம்.இ., எம்.எஸ்சி., எம்பிஏ, என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் எம்.எஸ்சி. என பல்வேறு படிப்புகள் உள்ளன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பான முதுகலை சட்டப் படிப்பை (எல்எல்எம்) வழங்குகிறது. என்விரான்மென்டல் இன்ஜினீயரிங், என்விரான்மென்டல் மேனேஜ்மென்ட், என்விரான்மென்டல் சயின்ஸ் போன்ற பாடப் பிரிவுகளில் ஆராய்ச்சிப் படிப்பும் (பிஎச்டி) படிக்கலாம்.

சுற்றுச்சூழல் பொறியியல், சுற்றுச் சூழல் அறிவியல் படித்தவர்களுக்கு விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர், விஞ் ஞானி, என்விரான்மென்டல் கல்சல் டன்ட், என்விரான்மென்டல் இன்ஜினீயர் (டிசைன்), என்விரான்மென்டல் ஹெல்த் அண்ட் சேஃப்டி இன்ஜினீயர், வாட்டர் இன்ஜினீயர் என பல்வேறு விதமான பணிகள் காத்திருக்கின்றன. மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (நீரி), சிஎஸ்ஐஆர் போன்ற மத்திய, மாநில அரசு நிறுவனங்களிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

அரியலூர் தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் (எலெக்ட்ரிக்கல் & இன்ஸ்ட்ருமென்டேஷன்) ஏ.கே.கணேஷ் ராம்: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மற்றும் அகில இந்திய பொறியியல் தேர்வு, பிட்சாட், ஜேஇஇ (மெயின்), ஜேஇஇ (அட்வான்ஸ்டு) உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் மூலமாக பிளஸ் 2 மாணவர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர லாம். பொறியியல் பாடப் பிரிவில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட் ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு எப்போதும் நல்ல வேலைவாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் (டிஎன்பிஎஸ்சி), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம் போன்ற தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகள் எழுதி மத்திய, மாநில அரசுப் பணிகளில் பொறியாள ராக சேரலாம்.

அதுமட்டுமின்றி, ‘கேட்’ நுழைவுத் தேர்வு மூலமாக என்டிபிசி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உயர் அதிகாரியாகவும் பணியில் சேர முடியும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் அண்ட் டி) துறையைப் பொருத்தவரை, இஸ்ரோ, டிஆர்டிஓ, பெல், ஹெச்.சி.எல். உள்ளிட்ட மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களின் பல்வேறு பணிகளில் சேரலாம். எலெக்ட்ரிக்கல் எலெக்ட் ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் பட்டதாரிகளுக்கு ஆட்டோமொபைல் துறையிலும், எலெக்ட்ரிக்கல், எலெக்ட் ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி நிறு வனங்களிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பில் இருந்தே நல்ல மதிப்பெண் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப அறிவு, ஆய்வுத் திறன், தகவல்தொடர்புத் திறன் போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் www.edx.org, www.coursera.org, www.khanacademy.org என்பது போன்ற இணையதளங்களை இலவசமாகப் பயன்படுத்தி தங்களது பலதரப்பட்ட திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) நிறுவன செயல் இயக்குநர் (தெர்மல்) ஏ.ரவீந்திரன்: பொறியியல் படிப்பில் ‘டிரிபிள் இ’ என செல்லமாக அழைக்கப்படும் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படிப்புக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது. இத்துறை இன்ஜினீயர்களின் தேவையானது இந்தியாவில் ஆண்டு தோறும் 9 சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வருங்காலத்தில் அனைத்து துறைகளும் எலெக்ட் ரானிக்ஸ் மயமாகத்தான் இருக்கும். எனவே, வேலைவாய்ப்புக்கு கவலையே இல்லை. குறிப்பாக, மின் உற்பத்தி துறையில் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும். சூரிய மின்சக்தி, காற்றாலை, அனல் மின்சாரம் என அனைத்து வகை யான மின் உற்பத்தியிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது, 2030-ம் ஆண்டில் அனைத்து வாகனங் களும் எலெக்ட்ரிக்கல் வாகனங்களாக மாறிவிடும். இந்தியாவில் 2024-ல் சாலையில் 10 லட்சம் மின் வாகனங்கள் ஓடும் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த வகை வாகனங்களின் உற்பத்தி, அவற்றுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்கள் பெருமளவில் இருக்கும் என்பதால் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இன் ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்புகள் அபரிமிதமாக இருக்கும். மொபைல் அப்ளிகேஷன், சாஃப்ட்வேர், எலெக்ட்ரானிக்ஸ், சிக்னல் புராசஸ், கம்யூனிகேஷன், எம்பெடட் சிஸ்டம் என பல்வேறு துறைகளில் அவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும். எனர்ஜி ஆடிட் மேனேஜர், ஃபயர் ரிஸ்க் அஸெசர், மல்டிமீடியா புரோகிராமர் போன்ற புதிய பணி வாய்ப்புகளும் அவர்களுக்கு காத்திருக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறைவாக, மாணவ, மாணவிகள், பெற்றோரின் பல்வேறு கேள்விகளுக்கு துறை நிபுணர்கள் பதில் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/3ifuQkS என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்

இன்று காலை, மாலை 2 நிகழ்ச்சிகள்

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சி இன்று 2 நிகழ்வுகளாக நடக்கிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், பொறியியல் கலந்தாய்வு தொடர்பான பல்வேறு பயனுள்ள தகவல்களை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் டி.புருஷோத்தமன் பகிர்ந்து கொள்கிறார்.

மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ‘பத்மஸ்ரீ’ ஆர்.எம்.வாசகம், கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் அமிர்தா ஸ்கூல் ஆஃப் அக்ரிகல்சுரல் சயின்சஸ் பேராசிரியர் மற்றும் ஆய்வுத் தலைவர் டாக்டர் சுதீஷ் மனலில் ஆகியோர் அக்ரிகல்சுரல் சயின்ஸ் படிப்பு தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவு செய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x