Published : 07 Aug 2020 07:19 AM
Last Updated : 07 Aug 2020 07:19 AM

‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘வானிலையும் வாழ்நிலையும்’- ஆக.20-ல் தொடக்கம்; எஸ்.ஆர்.ரமணன் பங்கேற்பு

சென்னை

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள், சிறுதொழில் முனை வோர், விவசாயிகள் என பல தரப் பினருக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடு களை இணையம் வழியாக முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், வானிலை மாற்றம், பருவமழை, உணவு உற் பத்தி, இயற்கை பேரழிவுகள் - மேலாண்மை, காலநிலை மாற்றம் மற்றும் சவால்கள் ஆகியவை குறித்து அனைவரும் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் ‘வானிலையும் வாழ்நிலையும்’ என்ற 5 நாள் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்து கிறது.

வரும் 20 ம் தேதி தொடங்கி, 24-ம் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இதில், சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் எஸ்.ஆர்.ரமணன் பங்கேற்று உரை யாற்ற இருக்கிறார்.

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புவியியல், இயற்பியல், கடல்சார் ஆய்வு மாணவர்கள், பெற்றோர், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் என ஆர்வம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்க செல்போன் இருந்தாலே போதும். பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/weather.php என்ற இணையதளத்தில் பதிவுக் கட்ட ணம் ரூ.235/- செலுத்தி, பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடு தல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x