Published : 06 Aug 2020 09:25 PM
Last Updated : 06 Aug 2020 09:25 PM

அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கல்வி: தனியார் தொலைக்காட்சி வகுப்புகள், பாடம், நேரம் வெளியீடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும் வகையில், கல்வி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்களைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 59 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 1.3 கோடி மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். சுமார் 5.7 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே கரோனா வைரஸ்பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைதரப்பட்டுள்ளது.தொடர் விடுமுறை யால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முறையான கணினி, இணையதள வசதியில்லாததால் அரசுப் பள்ளி மாணவர்கள் இணையவழிக் கல்வியை பின்பற்ற முடியாமல் தவிப்பில் ஆழ்ந்தனர். இவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரங்களைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதில் தொலைக்காட்சிகள் மூலம் நடக்கும் பாடம், வகுப்புகள், நேரம், என்ன பாடம் என்பது குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x