Last Updated : 03 Aug, 2020 07:23 PM

 

Published : 03 Aug 2020 07:23 PM
Last Updated : 03 Aug 2020 07:23 PM

அரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்: லேப்-டாப், நெட் வசதியின்றி குறைந்த மாணவர்களே பங்கேற்பு  

மதுரை  

பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளிலும் இரண்டாம், மூன்றாமாண்டு மற்றும் முதுகலை மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இன்று தொடங்கியது.

கரோனா பரவல் காரணமாக இவ்வாண்டு தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடக்கிறது.

அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்கள் சேர்க்கை நிறைவுற்ற நிலையில், அரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

ஆகஸ்டு 10-ம் தேதி வரை சான்றிதழ்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 10-ம் தேதிக்கு மேல் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளிலும் இரண்டாம், மூன்றாமாண்டு மற்றும் முதுகலை மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இன்று தொடங்கியது.

ஏற்கெனவே ஆன்லைன் வகுப்பு கள் குறித்து அனைத்துக் கல்லூரி நிர்வாகத்திற்கும் அந்தந்த கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர்கள், பல்கலை துணை வேந்தர்களால் அறிவுறுத்தப்பட்டது.

பாடமெடுக்கும் வகுப்பாசிரியர்களுக்கு கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 முதல் மதியம் 1 மணி வரை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் (part-1, part-2), மூன்றாமாண்டு மாணவர்களுக்கு மெயின், துணைப் பாடங்கள் எடுக்கப்பட்டன.

அந்தந்த வகுப்பாசிரியர்கள் வீடுகளில் இருந்தபடி, இணைய வழியில் வகுப்பெடுத்தனர். பெரும்பாலான கல்லூரிகளில் குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

லேப்-டாப், ஆன்டராய்டு மொபைல், நெட் வசதியின்மை காரணமாக சில கல்லூரிகளில் மிகக் குறைந்த மாணவ, மாணவியர்களே வகுப்பில் இணைந்தனர்.

முதுகலை மாணவர்கள் ஓரளவுக்கு பங்கேற்றனர். தொடர்ந்து இந்த செமஸ்டர் முழுவதும் ஆன்லைன் வகுப்பெடுக்கும் சூழலே உருவாகும் என, பேராசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சிவகாசி அரசுக் கல்லூரி முதல்வர் காந்திமதி கூறுகையில், எங்களது கல்லூரி இன்று காலை 9 மணிக்கெல்லாம் ஆன்லைன் வகுப்பு தொடங்கினோம்.

மாணவர்கள் ஆர்வமுடம் பங்கேற்றனர். 50 சதவீதத்தினருக்கு மேல் இணையவழியில் இணைந்து வகுப்பு களை கவனித்தனர். வகுப்புகள் முறையாக நடக்கிறதா என கண்காணிக்கப்பட்டது.

தொடர்ந்து இணையவழியில் மாணவர்கள் பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் இணையவழி வகுப்பு நடவடிக்கை தொடர்பாக இணை இயக்குநர் அறிக்கை அளிக்கப்படும். முதலாமாண்டு மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x