

தமிழகத்தை அடுத்து புதுச்சேரி, காரைக்காலிலும் 11-ம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள் இன்று வெளியாகின. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 96.87 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.09 சதவீதம் அதிகமாகும்.
புதுச்சேரி, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 6,881 மாணவர்களும், 7,799 மாணவிகளும் எழுதினர். இதில் மொத்தமுள்ள 14,680 பேரில் 14,220 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் தேர்ச்சி விகிதம் 96.87 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.09 சதவீதம் அதிகமாகும்.
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் அதிகரிப்பு
அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசுப் பள்ளிகளில் தேர்வு எழுதிய 6,401 மாணவர்களில் 5,988 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.55 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.38 சதவீதம் அதிகமாகும்.
தனியார் பள்ளிகளின் தேர்ச்சி
புதுத்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளில் 8,279 மாணவர்கள் 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். இதில் 8,232 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 99.43 ஆகும்.