Published : 27 Jul 2020 07:02 AM
Last Updated : 27 Jul 2020 07:02 AM

சிற்பக்கலை, இசை படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை

அரசு சிற்பக்கலை மற்றும் இசை கல்லூரிகளில் சேருவதற்கு இன்று (ஜூலை 27) முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலை, பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இயங்கிவரும் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியில் 4 ஆண்டுகள் பி.டெக், பிஎப்ஏ படிப்புகள் கற்றுதரப்படுகின்றன. இந்தகல்லூரியில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் இன்று(ஜூலை 27) முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அதற்குரிய விண்ணப்பக் கட்டணத்தை வங்கியில் செலுத்தி அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கலை,பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

அதேபோல், சென்னை, கோவை, மதுரை, திருவையாறில் இயங்கும் அரசு இசைக் கல்லூரிகளில் வயலின், வீணை, பரதநாட்டியம், கிராமியக் கலை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சேருவதற்கு 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று (ஜூலை 27) முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை www.artandculture.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கலை, பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x