Published : 23 Jul 2020 07:18 AM
Last Updated : 23 Jul 2020 07:18 AM

நீர் மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தி மாநில அளவிலான இணையவழி கட்டுரைப் போட்டி: ஜூலை 31-க்குள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நீர் வளம் காக்கும் சிந்தனையை வளர்க்கும் நோக்கில், எய்ம், நீர் இணையம் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மாநிலஅளவிலான கட்டுரைப் போட்டியை நடத்துகின்றன.

மனித வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நீரின் தேவையை உணரும் வகையிலும், நீர் நிலைபாதுகாப்பு முறைகளைப் பற்றியசிந்தனைகளை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கிலும் இந்தக் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

‘நீர் வளம் காக்கும் நெறிகளில் புதுமை சிந்தனைகள்’ எனும் இந்தக்கட்டுரைப் போட்டி, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என இருபிரிவுகளாக நடைபெறும். பதிவுக் கட்டணம் கிடையாது.

இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சுயமாக சிந்தித்து, புதிய யுக்திகளைக் கையாண்டு நீரைக் காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 200 முதல் 300 வார்த்தைகளுக்குள் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரைகளை www.aimngo.com, www.neerinaiyam.org ஆகிய வலைதளங்கள் வழியாக வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறந்த கட்டுரைகளை எழுதும்100 மாணவர்களுக்கு இணையம்வழியாக பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் இணையம் வழியாக இ-சான்றிதழ் வழங்கப்படும்.

எய்ம் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் மற்றும் ஆலோசகர் ஆ.நாகராசு, நீர் இணையம் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகஅறங்காவலர் வினோத் கலியபெருமாள் ஆகியோர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு முடிவுகளை அறிவிக்கும் என்று எய்ம் தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் மீடியா பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’நாளிதழ் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9786046231 என்ற செல்பேசியில் தொடர்புகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x