Last Updated : 20 Jul, 2020 02:42 PM

 

Published : 20 Jul 2020 02:42 PM
Last Updated : 20 Jul 2020 02:42 PM

கரோனாவால் தொழில்நுட்ப படிப்பை தேர்வு செய்ய தயக்கம்?- கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் அதிகரிப்பு

கரோனா பாதிப்பால், மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேரத் தயங்கும் சூழலில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பொதுவாக நகர்புறங்களைப் போன்றே கிராமங்களிலும் பொறியியல், வேளாண்மை படிப்புகள் போன்ற தொழில்நுட்ப கல்வியில் சேரவே மாணவர்கள் தரப்பில் ஆர்வம் காட்டப்படும்.

பொறியியல் கல்லூரி எண்ணிக்கை அதிகரிப்பால், பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது கடினமாகிறது.

இச்சூழலால் பொறியியல் கல்லூரி மோகம் குறைந்து, கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏதாவது ஒரு பட்டத்தைப் பெற்று, போட்டித் தேர்வு மூலம் அரசு வேலைக்கு சென்றிடலாம் என்ற நம்பிக்கையில் சேருகின்றனர்.

குறிப்பாக பிஎஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், பி.ஏ ஆங்கிலம், தமிழ் இலக்கியம் படித்தால் பி.எட் முடித்து, அரசு, தனியார் பள்ளிகளில் வேலைக்கு போகலாம் என்பதால் பெண் பிள்ளைகளை இது போன்ற பாடப் பிரிவுகளில் பெற்றோர் சேர்க்க விரும்புகின்றனர்.

இந்நிலையில் கரோனாவால் இவ்வாண்டு ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. ஏற்கெனவே அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் ஜூலை 15-க்கும் முன்பாக இருந்தே விண்ணப்பங்கள் பெறுகின்றனர்.

சில தனியார் கல்லூரிகளில் முக்கிய பாடத்திற்கு (30-35 சீட்) சுமார் என்ற நிலையில் அவற்றிற்கு 1000 விண்ணப்பங்கள் வரை வந்த்ருப்பதாக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

அரசுக் கல்லூரிகளில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியான பிறகு இன்று (ஜூலை 20) முதல் விண்ணப்பிக் கின்றனர்.

கட்டணம் குறைவு என்பதால் அரசுக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். கரோனா தடுப்பு ஊரடங்கால் வேலையிழப்பு, பொருளாதார பிரச்சினையால் பொறியியல் கல்வியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க இருந்த பெற்றோர் பலரும், டிகிரியில் படிக்க வைக்கலாம் என்ற சூழலால் கலை, அறிவியல் கல்லூரிகளில் இவ்வாண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், கரோனாவால் வகுப்புகள் நடக்குமா என்ற தயக்கமும் பெற்றோர், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து தனியார் கல்லூரி முதல்வர் பாண்டிராஜன் கூறுகையில்,

‘‘கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போதும் போன்று அதிகரித்தாலும், பி.காம், பி.எஸ்.சி கணிதம், இயற்பியல், வேதியியல், கனிணி அறிவியல். பிஏ தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கு விண்ணப்பம் அதிகரித்துள்ளது.

எங்களது கல்லூரியில் பி.காம் ஹானஸ், பி.பி.எஸ் போன்ற புதிய பாடப்பிரிவுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. கரோனாவால் வகுப்புகள் தொடங்குமா என்ற தயக்கம் வேண்டாம்.

மாணவர்கள் பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த கல்லூரி நிர்வாகங்கள் தயாராக உள்ளன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x