Published : 20 Jul 2020 07:26 AM
Last Updated : 20 Jul 2020 07:26 AM

திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கு சாஸ்த்ராவில் பி.டெக் படிப்புக்கான ஒதுக்கீடு 30 சதவீதமாக அதிகரிப்பு

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் காரணமாக உள்ளூர் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும்வகையில், 2020- 2021-ம் ஆண்டில் திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கு ஒட்டு மொத்த பி.டெக். பட்டப்படிப்பில் 30 சதவீதத்தை சாஸ்த்ரா ஒதுக்கீடு செய்கிறது.

தேசிய கல்வி நிறுவன தர வரிசைப் பட்டியலில் இந்திய அளவில் முதல் 25 பல்கலைக் கழகங்களில் இடம்பெற்றுள்ள சாஸ்த்ராவில், இதுவரை திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கு தலா 10 சதவீதம் வீதம் மொத்தம் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் 10, 12-ம் வகுப்புகளை நிறைவுசெய்து விண்ணப்பித்துள்ள மாணவர் களில், தகுதியின் அடிப்படையில் சேர்ப்பதற்காகக் கூடுதலாக 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது.

மேலும், இப்பல்கலைக்கழகத் தில் பி.டெக். மற்றும் சட்டவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரி சைப் பட்டியல் ஜூலை 31-ம் தேதி இரவு 9 மணிக்கு இணையவழியில் வெளியிடப்படும். விண்ணப்பிக் கும் நாள், நேரம் முடிவடைந்து 4 மணிநேரத்துக்குள் இப்பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதுவரை மாணவர்கள் www.sastra.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக் கலாம். கலந்தாய்வு மற்றும் சேர்க்கைகள் இணையவழியில் நடத்தப்படவுள்ளதால், மாணவர் கள் பல்கலைக்கழகத்துக்கு வரத் தேவையில்லை.

மேலும், இறுதிப் பருவத்தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையவழி யில் இன்று(ஜூலை 20) வெளியி டப்படவுள்ளது.

இதேபோல, 2020- 2021-ம் கல்வியாண்டுக்கான இணைய வழி வகுப்புகள் ஆக.10-ம் தேதி தொடங்கப்படும். புதுமுக மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் பொதுமுடக்கம் நீக்கப்பட்ட பிறகு தொடங்கப்படும். இதற்கிடையே, இணையவழியில் இணைப்புப் பாடம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x