Published : 18 Jul 2020 08:05 AM
Last Updated : 18 Jul 2020 08:05 AM

சுயநிதி கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கை; ஜூலை 20 முதல் இணையவழியில் மட்டுமே விண்ணப்பம்: உயர்கல்வித் துறை உத்தரவு

உயர்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர www.tngasa.in, www.tndeceonline.org ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் முதல் 31-ம் தேதி வரை மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

தற்போது கரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக அரசு உதவி பெறும் மற்றும்சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வரும் 20-ம் தேதி முதல் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு 16-ம் தேதி வெளியானது. இதனால், தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது.

இதனால், கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தனியார் கல்லூரிகளும் இணைய வழி மூலமாகவே விண்ணப்பம் வழங்கவேண்டும் என்ற உத்தரவை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையவழியில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு 044-22351014/22351015 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x