Published : 17 Jul 2020 06:48 AM
Last Updated : 17 Jul 2020 06:48 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘இ ஸோன்’ வழங்கும் ‘ரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்’ 2-வது ஆன்லைன் முகாம் ஜூலை 24-ல் தொடக்கம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘இ ஸோன்’ (E ZONE) உடன் இணைந்து வழங்கும் ‘ரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்’ எனும் இணையவழி 2-வது முகாம் ஜூலை 24-ம் தேதி தொடங்குகிறது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக முன்னெடுத்து வரு கிறது.

7 வயதுக்கு மேற்பட்ட...

அந்த வகையில், ‘ரியல் லைஃப் சூப்பர் கிட்ஸ்’ எனும் முகாம் வரும் 24, 25, 26 என 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இம் முகாமில் 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம். தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறவுள்ளது.

குழந்தைகளின் பலம், பலவீனம் எது? அவர்களது தேடல் என்ன? என்பதை உரையாடல் மூலம் கண்டறிவதும், குழந்தைகளிடம் மறைந்துள்ள திறன்களை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த முகாமின் உரையாடல் அமையும். மூன்றாம் நாளில் குழந் தைகளின் பெற்றோருடன் பயிற்சியாளர் உரையாட விருக்கிறார்.

தியேட்டர் அடிப்படையிலான முறை

இந்தியாவின் முதல் நாடக அடிப்படையிலான வாழ்க்கைப் பயிற்சியாளர் ஜே.எல்.ஜான் பிரதீப், இம்முகாமில் பங்கேற்று உரையாடவுள்ளார். தியேட்டர் அடிப்படையிலான முறைகளைப் பயன் படுத்தி, குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும் உற்சாக மாகவும் பயிற்சி அளிக்கக் கூடியவர்.

அமெரிக்காவின் ‘பேஷன் ப்ளே இன்டர்நேஷனல்’, ‘வேர்ல்ட் க்ளோன் அசோசியேஷன்’ ஆகிய அமைப்பு களிலும் இந்தியாவின் ‘ஸ்கூலோ பிரீனர்’ போன்றவற்றிலும் இவர் உறுப்பினராக உள்ளார்.

பதிவுக் கட்டணடம் ரூ.294

இந்த முகாமில் பங்கேற்க, பங்கேற்புக் கட்டணம் ரூ.294/-செலுத்தி, https://connect.hindutamil.in/rlsk.php என்ற லிங்கில் பதிவுசெய்து கொள் ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x