Published : 16 Jul 2020 10:14 AM
Last Updated : 16 Jul 2020 10:14 AM

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி; மாணவர்களைவிட மாணவிகள் 5.39% அதிகம் தேர்ச்சி

தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில், மாணவிகள், மாணவர்களைவிட 5.39 சதவீதம் அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளாகவும் தனித்தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 99 ஆயிரத்து 717. பள்ளி மாணவ,மாணவிகளாக தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 931. இதில் மாணவிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 24 ஆயிரத்து 285. மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 646. பொதுப் பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 28 ஆயிரத்து 516. தொழிற்பாடப்பிரிவில் தேர்வெழுதியோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 415.

இந்நிலையில்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 16) அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில், மாணவிகள் 94.80% பேரும் மாணவர்கள் 89.41% பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் மாணவர்களைவிட 5.39% அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x