Published : 16 Jul 2020 07:27 AM
Last Updated : 16 Jul 2020 07:27 AM

பொறியியல் கலந்தாய்வு செப். 10-ல் தொடங்கும் உயர்கல்வித் துறை அமைச்சர்: கே.பி.அன்பழகன் அறிவிப்பு

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித் துள்ளார்.

தமிழகத்தில் 2020-21 கல்வியாண்டின் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய் வுக்கான கால அட்டவணையை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பொறியியல் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. ஏஐசிடிஇ அறிவுறுத்தலின்படி கலந்தாய்வை அக்டோபர் 15-ம் தேதிக் குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

பொறியியல் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர் கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். ரேண்டம் எண் ஆகஸ்ட் 21-ம் தேதியும், தரவரிசை பட்டியல் செப்டம்பர் 7-ம் தேதியும் வெளியிடப்படும்.

அதன்பிறகு, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 14-ம் தேதி வரையும், பொதுப் பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரையும், 2-ம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 8 முதல் 12-ம் தேதி வரையும் நடத்தப்படும். எஸ்.சி. பிரிவுக்கான கலந்தாய்வு அக்டோபர் 14, 15 தேதிகளில் நடைபெறும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு விளை யாட்டு பிரிவு மாணவர்கள் மட்டும் நேரடியாக வரவேண்டும். மற்றவர்கள் இணையவழியில் பங்கேற்கலாம். சான் றிதழ் சரிபார்ப்புக்கு உதவி மையங் களை நாடாமல் செல்போன் மூலம் சரி பார்த்துக் கொள்ள வசதி செய்யப்பட் டுள்ளது. எனினும், கிராமப்புற மாணவர் களின் நலன் கருதி 52 உதவி மையங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்மூல மாகவும் மாணவர்கள் பயன்பெறலாம்.

இறுதியாண்டு மாணவர்களுக்கு பரு வத்தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு இதுவரை பதில் வரவில்லை. இது குறித்து ஆராய உயர்கல்வித் துறை செய லர் தலைமையில் குழு அமைக்கப்பட் டுள்ளது. அந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில், முதல்வரிடம் விரைவில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டி ருந்த அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சையில் இருந்து குணமடைந்து திரும்பிய பிறகு நேற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x