Published : 13 Jul 2020 12:31 PM
Last Updated : 13 Jul 2020 12:31 PM

எஸ்ஆர்எம் ஜேஇஇஇ நுழைவுத் தேர்வுகள் ரத்து; 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

கரோனா காரணமாக எஸ்ஆர்எம் ஜேஇஇஇ நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SRMJEEE பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு (பி.டெக்) ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை இந்தியாவில் உள்ள 127 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் துபாய், தோஹா, மஸ்கட், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய இடங்களில் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்வாகும் மாணவர்கள் எஸ்ஆர்எம் (காட்டங்கொளத்தூர், ராமாபுரம், வடபழனி, டெல்லி NCR, சோனிப்பெட்- ஹரியாணா, சிக்கிம், அமராவதி -ஆந்திரப் பிரதேசம்) கல்லூரியில் (பி.டெக்) படிப்பில் சேரலாம்.

இந்நிலையில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜேஇஇஇ நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’கரோனாவால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.

இயற்பியல், வேதியியல், கணிதம்/ உயிரியல் ஆகிய பாடங்களின் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விஐடி பல்கலைக்கழகமும் தனது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x