Published : 10 Jul 2020 02:04 PM
Last Updated : 10 Jul 2020 02:04 PM

கரோனா காலத்தில் குழந்தைகளின் மனஅழுத்தத்தைப் போக்கும் வழிமுறைகள்: சென்னை மாநகராட்சி வெளியீடு 

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கரோனா நுண்கிருமி தொற்றுப் பரவல் சூழல் உள்ள இக்காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

1.ஏக்கம், பின்வாங்குதல், கோபத்தை வெளிப்படுத்துதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்கள் மூலம் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வெளிக்காட்டலாம்.
2.குழந்தைகளுக்குக் கூடுதல் அன்பையும், கவனத்தையும் கொடுக்க வேண்டியது அவசியம்.
3.கடினமான காலங்களில் பெரியவர்களின் துணை தேவை. குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடுங்கள்.
4.குழந்தைகளின் கருத்துகளுக்கு செவிசாயுங்கள், இந்நிலை சரியாகும் என்று உறுதியளியுங்கள்.
5.குழந்தைகள் விளையாடவும் ஓய்வெடுக்கவும் அதிக வாய்ப்புகளைக் கொடுங்கள்.
6.பெற்றோரும் குடும்பத்தினரும் நெருக்கமாக இருங்கள். ஒருவேளை பிரிந்திருக்க வேண்டிய சூழலில் (மருத்துவமனையில் அனுமதி) குழந்தைகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுங்கள்.
7.பள்ளி/கற்றல் சம்பந்தமாக புத்துணர்ச்சி தரும் புதிய சூழல் தேவை. குழந்தைகள் பாதுகாப்பாக விளையாட புதிய பழக்கங்களை உருவாக்குங்கள்.
8.கரோனா தொற்று குறித்த சரியான, சமீபத்திய தகவல்களை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளக்குங்கள், பரவலைத் தடுக்கும் வழிமுறைகளையும் கற்பித்தல் அவசியம்.
9.சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளை (உதாரணத்துக்கு: குடும்பத்தில் யாராவது மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டால்) விளக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x