Last Updated : 07 Jul, 2020 09:36 PM

 

Published : 07 Jul 2020 09:36 PM
Last Updated : 07 Jul 2020 09:36 PM

இணையவழிக் கல்வி; பேராசிரியர்களுக்குப் பயிற்சி: காமராசர் பல்கலைக்கழகம் ஏற்பாடு

பல்கலையில் பேராசிரியர்களுக்கான தரமேம்பாடு இணையவழி பயிற்சியில் பங்கேற்ற துணைவேந்தர், பேராசிரியர்கள்.

மதுரை

காமராசர் பல்கலையில் டிஜிட்டல் கற்றல், கற்பித்தலுள்ள வாய்ப்பு, சவால்கள், உத்திகள் குறித்து, ஒரு வார கால
இணையவழிப் பயிற்சி நடந்தது.

இன்றைய நெருக்கடியான சூழலில் ஆசிரியர்களின் கற்பித்தல் முறையை பயிற்சி மூலம் மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

மாணவர்கள், பேராசிரியர்களுக்கான இணையதளப் பாதுகாப்பு, இணையக்கல்வி சம்பந்தப்பட்ட வாய்ப்புகள் மற்றும் மனநலம் சார்ந்த உளவியல் காரணிகள் பற்றி பயிற்சியில் ஆராயப்பட்டது.

கற்றலில் இணையதள வாய்ப்புக்களைப் பயன்படுத்துவது, மேம்படுத்துவது குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர்.

மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தாலும், அசாதாரண சூழலிலும் மாற்றத்தை எதிர்கொண்டு எதிர்கால மனவலிமைக்கும் இது உதவும் என, நம்புவதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 150-க்கும மேற்பட்ட பேராசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

இது தொடர்பாக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் கூறியது: ஆசிரியர்கள் கல்வி சார்ந்த தர மேம்பாட்டின் முக்கியத்துவம் கருதி இப்பல்கலை தொலைதூரக்கல்வி இயக்ககம் மேலாண்மைத் துறை சார்பில், இத்திறன் மேம்பாடு இணைய வழி பயிற்சி அளித்தது.

இச்சூழல் சமுதாயத்திற்கு பயன்படும் கல்விமுறைக்கு உதவ அரசுக்கு அறிக்கை ஒன்றினை சமர்பிக்க பல்கலைக்கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிராமப்புற மாணவர்களுக்கு இணையவழி வகுப்புக்களுக்குத் தேவையான கணினி, இணையவசதி இல்லை என்பது வருத்தம், என்றார்.

பயிற்சியின் நிறைவு விழாவில் துணைவேந்தர், பதிவாளர் (பொறுப்பு) வசந்தா, தொலைநிலைக்கல்வி இயக்குநர் விஜயதுரை உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x