Published : 06 Jul 2020 07:55 AM
Last Updated : 06 Jul 2020 07:55 AM

புறநிழல் சந்திர கிரகணத்தை இணைய வழியில் மாணவர்கள் கண்டுகளிப்பு

உடுமலையில் புறநிழல்சந்திர கிரகணத்தை இணையதளத்தில் மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர்.

இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறும்போது, 'ஒரு மாத இடைவெளியில் நேற்று தென்பட்ட புறநிழல் சந்திரகிரகணத்தை, இந்தியாவில் பகல் நேரமாக இருந்ததால் காண முடியவில்லை. ஆனால், வட அமெரிக்கா ,தென் அமெரிக்கா நாடுகளில் தெரிந்தது. புறநிழல் சந்திர கிரகணத்தின்போது பூமி மறைக்காமல் பூமியின் நிழல் மட்டும் நிலவின் மீது விழுவதால் தெளிவற்ற கிரகணம் தெரியும். இந்த அரிய நிகழ்வை, உடுமலையில் இணைய வழியில் மாணவ, மாணவிகள் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

பூலாங்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் கலந்துகொண்டார்.

மாணவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x