Published : 29 Jun 2020 12:33 PM
Last Updated : 29 Jun 2020 12:33 PM

மாணவர்களின் வருகைப் பதிவு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஆசிரியர்களுக்கு உத்தரவு

எந்தவிதப் புகாருக்கும் இடமின்றி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் வருகைப் பதிவை இணையதளத்தில் கவனத்துடன் பதிவேற்ற வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) மு.பழனிச்சாமி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் இருந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் முகப்புத் தாளை மாவட்டக் கல்வி அலுவலகங்கள் திங்கட்கிழமை (இன்று) பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் வருகைப் பதிவேட்டைச் சரிபார்த்து, பள்ளி வேலை நாட்கள் எத்தனை மாணவர்கள் வருகை தந்த நாள்கள் எத்தனை என்பதை அதில் குறிப்பிட வேண்டும்.

அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் வருகைப் பதிவேடு விவரங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும். வருகைப் பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

இந்தப் பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், ரகசியம் காத்துச் செயல்பட வேண்டும். இந்தப் பணிகளில் எவ்விதப் புகாருக்கும் இடம் கொடுக்காமல் கவனமாகச் செயல்படவேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் இந்த முகாமை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் தவறாது பாா்வையிட்டு, அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவேண்டும்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x