Last Updated : 10 Jun, 2020 07:56 PM

 

Published : 10 Jun 2020 07:56 PM
Last Updated : 10 Jun 2020 07:56 PM

முதன்முறையாக காமராசர் பல்கலையில் 10 நாள் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம்: தமிழ் வளர்ச்சி குறித்து பேசிய பேராசிரியர்கள்

மதுரை காமராசர் பல்கலையில் முதன்முறையாக பல்கலைக் கழக தமிழ்த்துறை, உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும் இணைந்து உலக நாடுகளில் தமிழ் மொழியின் வளர்ச்சி என்ற தலைப்பில் 10 நாள் பன்னாட்டு இணைய வழிக் கருத்தங்கை நடத்துகின்றது.

துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். உலகத் தமிழ ராய்ச்சி நிறுவன இயக்குநர் விசயராகவன் தொடக்கவுரையாற்றினார்.

மலேசியாவின் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் மலாயப் பல்கலை பேராசிரியர் குமரன், இலங்கையில் தமிழ் வளர்ச்சி- அந்நாட்டு தமிழ் பேராசிரியர் ஜெயசீலன், ஆஸ்திரேலியாவில் தமிழ் வளர்ச்சி- மெல்பேண்ணில் தமிழ் மொழி கல்வி முன்னாள் இயக்குநர் ஜெயராம சர்மா, கனடாவில் தமிழ் வளர்ச்சி - கனடா வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அதிபர் கோதை அமுதன், பிரான்ஸ் நாட்டில் தமிழ் வளர்ச்சி- அந்நாட்டிலுள்ள பன்னாட்டு உயர்கல்வி நிறுவன இயக்குநர் சச்சிதானந்தம், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சி- அந்நாட்டு நன்யாங் தொழில் நுட்ப பல்கலை பேராசிரி யர் சீதா லட்சுமி, இங்கிலாந்து, கம்போடியா, சுவிர்சர்லாந்து, ஜெர்மன் நாட்டிலுள்ள தமிழ் வளர்ச்சிகள் குறித்து அந்தந்த நாட்டு சிறந்த பேராசிரியர்களும் உரையாற்றினர்.

உலக நாடுகளில் இருந்து ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என, 2500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ் வொரு நாளும் 1400க்கும் மேற்பட்டோர் இணைய வழியில் இணைந்து கருத்தரங்கை கேட்டு பயனடைந்தனர்.

இக்கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். பதிவாளர் நடேசன் சங்கர் நிறைவுரையாற்றினார்.

ஜெர்மன் ஜொ சன்னஸ் குட்டன் பெர்க் பல்கலை மருத்துவத்துறை துணை பேராசிரியர் கீதாஞ்சலி பிர்கோட், மலேசிய பகாங் தெங்கு அம்பு வான் அப்சான் கல்வியியல் கழகத் தலைவர் துரைமுத்து சுப்ரமணியன் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பேராசிரி யர்களும், காமராசர் பல்கலை அறிவியல் தொழில்நுட்பத்துறை பேராசிரியர்களும் பங்கேற்றனர்.

இந்த இணையவழி கருத்தரங்கு ஏற்பாடுகளை பேராசிரியர் சத்யமூர்த்தி, உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குநர் விசயராகவன் சிறப்பாக செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x