Published : 25 May 2020 07:51 AM
Last Updated : 25 May 2020 07:51 AM

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் பட்டியல் ஜூன் 6-க்குள் அனுப்ப உத்தரவு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை ஜூன் 6-க்குள் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) எஸ்.நாகராஜமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.06.2020 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை ஜூன் 6-க்குள் மின்னஞ்சல்மூலமாக அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அனுப்பும்போது 1.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியர் இன்றி உபரிஎனக் கண்டறிந்து, இயக்குநரின்பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களையும், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின்பெயர்களையும் காலிப்பணியிடங்களாக கருதக் கூடாது.

இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 வருடாந்திர தேர்வுக்கால அட்டவணைப்படி, 730இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு பற்றிய அறிவிப்பு வரும்ஜூலை 9-ம் தேதியும், அதேபோல்,572 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை17-ம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x