Published : 11 May 2020 06:44 AM
Last Updated : 11 May 2020 06:44 AM

ஜூலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்?- 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதிக்கவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு / சென்னை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:

இந்தியாவில் முதன்முறையாக பட்டய கணக்காளர் தேர்வுக்காக 75 ஆயிரம் மாணவர்களுக்கு இன்று (நேற்று) முதல் ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிகள் திறக்கும்போது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து, குழு ஆய்வின்படி ஆலோசனை நடத்தி, அதுகுறித்த அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார்.

ஆண்டுதோறும் அரசு பொதுத் தேர்வை 3 லட்சத்து 34 ஆயிரம் மாண வர்கள் எழுதுகின்றனர். தேர்வு நடத்தும்போது, மாணவர்களி டையே இடைவெளி இருக்கும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவருக்கும் தேர்ச்சி அளித்து விடலாம் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூறியபோது, அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. 10–ம் வகுப்பு தேர்வின் மதிப்பெண்கள் தான் மாணவர்களின் உயர்கல் விக்கு வழிவகுக்கும். எனவேதான் பொதுத்தேர்வை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜூலையில் பிளஸ் 2 முடிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலையில் வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது.​ இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களின் அருகே கூடுதல் மையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. முதன்மை தேர்வாளர், கண்காணிப் பாளர் உட்பட அனைத்து பிரிவு களுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்படும். சமூக இடை வெளியை பின்பற்றும் விதமாக ஒரு அறையில் அதிகபட்சம் 8 பேர் வரை அமர வைக்கப்படுவர். ​

ஆசிரியர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். ​ ஆசிரியர்கள் கூடுதல் விடைத்தாள்களை திருத்த வற்புறுத்தப்படாது. நோய்த்தொற்று அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு​ விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ​

தற்போது திருத்துதல் பணிகளுக்கான ஆசிரியர்களின் விவரங்கள் கல்வி மாவட்ட வாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வுக்குபின் விடைத்தாள் திருத்தும் பணிகளை மே இறுதியில்தொடங்கவும், தேர்வு முடிவுகளை ஜூலையில் வெளியிடவும் திட்ட மிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x