Last Updated : 28 Apr, 2020 12:11 PM

 

Published : 28 Apr 2020 12:11 PM
Last Updated : 28 Apr 2020 12:11 PM

ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள்

மதுரை

மதுரையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் செஞ்சிலுவை சங்கத்துடன் சேர்ந்த உதவி செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1986 முதல் 1990 வரை பயின்ற மாணவர்கள் இந்தியாவில் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளிலிருந்து மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

மதுரையில் அண்ணாநகர், நாகமலை புதுக்கோட்டை, பைகாரா, தனக்கன்குளம், பர்மா காலனி, அலங்காநல்லூர் நரிக்குறவர் காலனி, அரசரடி, மஞ்சணக்காரத்தெரு மற்றும் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் வசிப்பதால் மதுரையில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் என இதுவரை ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள் தொகுப்பு வழங்கினர்.

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், போலீஸார் மற்றும் கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்கினர்.

இதில் முன்னாள் மாணவர்களுடன் மதுரை மாவட்ட செஞ்சிலுவை சங்க அவைத் தலைவர் வி.எம்.ஜோஸ், செயலர் கோபாலகிருஷ்ணன், பேரிடர் மீட்பு குழு உறுப்பினர்கள் விமல், வைரமுத்து, ராஜு, வழக்கறிஞர் முத்துக்குமார், மூகாம்பிகை, ராஜகோபால் உள்ளிட்டோர் கரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x