Published : 22 Apr 2020 08:17 AM
Last Updated : 22 Apr 2020 08:17 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; சமூகவலைதளங்களில் பரவும் தேர்வுக்கால அட்டவணை- தேர்வுத்துறை விளக்கம் ​

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வுக்கால அட்டவணை விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை என்று தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது. ​

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஏப்ரலில் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ​இந்த தேர்வுகளை மே மாத இறுதியில் நடத்துவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தேர்வு குறித்த அறிவிப்பு ஊரடங்கு முடிந்தபின் வெளியாகும் எனபள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.​

இந்நிலையில் ஷேர் சாட்,வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதி விவரங்கள் குறித்த காலஅட்டவணை ஒன்று பரவி வருகிறது. அதில், பொதுத்தேர்வு மே 20-ல் தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தபடி ஒருநாள் கால இடைவெளியில் அட்டவணை இருப்பதால், மாணவர்கள் பலர்அதை உண்மை என நம்பி பரப்பி வருகின்றனர். ​

இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்த விவகாரத்தில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. சூழலின் தீவிரம் கருதி இருவிதமான பொதுத்தேர்வுக் கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு அரசு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிவில்வைரஸ் பரவலை ஆராய்ந்து உரிய கால அட்டவணையை தேர்வுக்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாகவே அரசு அதிகாரப்பூர்வாக வெளியிடும். எனவே, வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்பாமல் மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுடனே சேர்த்து 11, 12-ம்வகுப்புக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன ’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x