Published : 14 Apr 2020 11:00 AM
Last Updated : 14 Apr 2020 11:00 AM

இணையத்தில் பொறியியல், பாலிடெக்னிக் பாடப் புத்தகங்கள், காணொலிகள்: இலவசமாகப் பயன்படுத்தலாம்

இணையத்தில் பொறியியல், பாலிடெக்னிக் காணொலிகள், புத்தகங்களை இலவசமாகப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்க இருந்த நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், வீட்டிலிருந்தபடியே அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகளை வழங்குமாறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவுறுத்தின.

இந்நிலையில், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படிக்கும் வகையில், காணொலி விரிவுரைகள், மின்னணுப் புத்தகங்களைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இதில் அனைத்துப் பாடங்களுக்கான காணொலி விரிவுரைகள் மற்றும் மின்னணுப் புத்தகங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

மின்னணு புத்தகங்களைக் காண: http://www.tndte.gov.in/site/e-text-book/
காணொலி மூலம் கற்பித்தலுக்கு: http://www.tndte.gov.in/site/e-lectures/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x