Published : 08 Apr 2020 01:57 PM
Last Updated : 08 Apr 2020 01:57 PM

குழந்தைகளுக்கான அறிவுபூர்வ விளையாட்டுகள் அடங்கிய இணையப் பக்கம்; பதிவிறக்கம் தேவையில்லை: அப்படியே கற்கலாம்

குழந்தைகளுக்கான மொழியாளுமை, இலக்கணம், கணிதம், நினைவாற்றலை அதிகரிக்கும் அறிவுபூர்வ விளையாட்டுகளை pschool.in என்ற பக்கம் தருகிறது.

கரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் பொழுதைப் போக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் 2 வயதில் இருந்தே குழந்தைகள் மொபைலைக் கையாளப் பழகிக் கொள்கின்றனர். வீட்டில் விளையாடுவதைத் தாண்டி, போனில் வீடியோக்கள், கேம்கள் என நேரத்தைக் கழிக்கின்றனர். இதற்கிடையில், pschool.in என்ற இணையப் பக்கம் மொபைல் மற்றும் கணினியில் அறிவுபூர்வ விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், வாசித்தல், எழுதிப் பழகுதல், இலக்கணம், மொழி அறிவு, எளிமையான கணக்குகள், அலாரம், சுடோகு, குறுக்கெழுத்து, சரியான இடத்தில் பொருத்துதல், வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்தல், நினைவாற்றல் வளர்ப்பு, தமிழ் மொழி கற்றல் என ஏராளமான கற்றல் தேர்வுகள் உள்ளன.

இதுதவிர ஆங்கிலக் கதைகள், உரையாடல்கள், கவிதைகளும் காணக் கிடைக்கின்றன.

நம் குழந்தைக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து அதில் விளையாடச் சொல்லலாம். அல்லது பிடித்ததை அவர்களையே தேர்ந்தெடுக்கச் சொல்லலாம்.

இது செயலி அல்ல என்பதால், எங்கும் சென்று பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. நம்முடைய தகவல்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்.

www.gotowisdom.com என்ற இணையதளம் சார்பில் இந்தப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் இணைய முகவரி: https://www.pschool.in/

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x