Published : 02 Apr 2020 05:46 PM
Last Updated : 02 Apr 2020 05:46 PM

மிகக்குறைந்த கட்டணத்தில் அரசுப் பல்கலை.யில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகள்

மிகவும் குறைந்த கட்டணத்தில் அரசு மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகளைப் படிக்க முடியும்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் நாடு முழுவதும் 13 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதுதவிர 5 பல்கலைக்கழகங்களும் இயங்கி வருகின்றன. இவை அனைத்துமே மிகவும் குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்குகின்றன. மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியான ஹாஸ்டல் வசதியும் இங்குண்டு.

மத்தியப் பல்கலைக்கழங்களுக்கென நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் ஏதாவது ஒரு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஹரியாணா, ஜம்மு, ஜார்க்கண்ட், காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெற்கு பிஹார், பெர்ஹாம்பூர்) சேர்ந்து படிக்கலாம்.

தமிழகத்தில், திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு படிக்க 60 சதவீத மதிப்பெண்களோடு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் 55 சதவீதமும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதுமானது.

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் அறிவியல்), ஒருங்கிணைந்த எம்.ஏ., மற்றும் எம்பிஏ உள்ளிட்ட முதுகலைப் படிப்புகள் இங்கே கற்பிக்கப்படுகின்றன., எம்.பில்., பிஎச்டி ஆகிய படிப்புகளும் இங்கே உண்டு. இளங்கலை ஆசிரியர் பயிற்சி, இளங்கலை சட்டப் படிப்பு, மக்கள் தொடர்பியல், ஒருங்கிணைந்த சமூக அறிவியல் ஆகியவையும் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்துப் படிப்புகளுக்கும் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் மட்டுமே ஒரு செமஸ்டருக்கான கட்டணமாகும். ஒவ்வோர் ஆண்டும் 1100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இதில் உள்ளன.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
https://cucetexam.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மே 30, 31 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைந்த மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு நடைபெறும். ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு கணினி வழித் தேர்வு ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: ஏப்ரல் 11, 2020.

கூடுதல் விவரங்களுக்கு: https://cucetexam.in/Document/How_to_Apply.pdf

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x