Last Updated : 31 Mar, 2020 11:04 AM

 

Published : 31 Mar 2020 11:04 AM
Last Updated : 31 Mar 2020 11:04 AM

10-ம் வகுப்புப் பாடங்களில் சந்தேகமா?- புதுச்சேரியில் மெய்நிகர் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

புதுச்சேரி

கரோனா விடுமுறையால் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுவோரின் சந்தேகங்களைப் பாடவாரியாகப் போக்க மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையை (Virtual Control Room) புதுச்சேரி கல்வித்துறை தொடங்கியுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நடத்தப்படாமல் முழுத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ளது. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். அவர்களுக்குப் பாடங்களில் சந்தேகம் இருந்தாலும் ஊரடங்கால் பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி கல்வித்துறை மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு கூறுகையில், "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவோரின் சந்தேகங்களைப் பாடவாரியாகப் போக்க மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையைத் (Virtual Control Room) தொடங்கியுள்ளோம்.

பாடங்களில் சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களைத் தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவோ காலை 6 மணி முதல் இரவு 10 வரை தொடர்பு கொள்ளலாம்.

பாடவாரியாகத் தொடர்பு கொள்ளும் எண்கள் விவரம்:
தமிழ் - 9566728352,
ஆங்கிலம்- 9944198425,
கணிதம் - 7200918139,
இயற்பியல், வேதியியல் - 9994203828,
உயிரியல்- 8015423235,
சமூகவியல்- 9994196886.

அத்துடன் பத்தாம் வகுப்புப் பாடங்களை உரிய வல்லுநர்களைக் கொண்டு வீடியோவாக்கியுள்ளோம். அதை யூடியூப்பிலும் பார்க்கலாம். அதன் முகவரி: http://www.youtube.com/channel/UC2102f5yOs2eBcmd68kn13g

இவ்வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகலாம்'' என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x