Published : 14 Mar 2020 08:38 AM
Last Updated : 14 Mar 2020 08:38 AM

இலவச நீட் பயிற்சி மார்ச் 26-ல் மீண்டும் தொடக்கம்: பள்ளி கல்வித் துறை தகவல்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 26-ம் தேதிமுதல் மீண்டும் தொடங்க வுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற போட்டித்தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான பயிற்சி வகுப்பு கடந்த செப்டம்பர் 24-ல் தொடங்கியது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து வார கடைசி நாட்களில் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் சுமார் 17 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இதற்கிடையே பொதுத்தேர்வை முன்னிட்டு ஜனவரி 5-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் மார்ச் 26-ம் தேதி முதல் மீண்டும் தொடங்க வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மே 3-ல் நீட் தேர்வு

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதி காரிகள் கூறும்போது, ‘‘மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்தபின்னர் மார்ச் 26-ம் தேதி மீண்டும் பயிற்சி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த முறை ‘இ-பாக்ஸ்’ நிறுவனத்தின் உதவியுடன் இணைய வழியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான சோதனை முன்னோட்டம் அனைத்து பயிற்சி மையங்களிலும் மார்ச் 17-ம் தேதி நடைபெறும்.

அந்த முன்னோட்ட செயல்பாடு கள் அடிப்படையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு பயிற்சி வழங்கப் படும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x