Published : 09 Mar 2020 11:49 AM
Last Updated : 09 Mar 2020 11:49 AM

கோவிட் -19 காய்ச்சல் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை

பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் டி.அனுசுயா, துறை சார்ந்த இயக்குநர்கள், அதிகாரி கள் மற்றும் பள்ளி தலைமை யாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. எனினும் நோய் பரவும் முறை, கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர் களிடம் ஏற்படுத்துவது அவசிய மாகும்.

இதை கருத்தில் கொண்டு அடிக்கடி கை கழுவுதல், இருமல், தும்மல் வந்தால் கைக்குட் டையை வைத்து வாயை மூடிக் கொள்ளுதல், ஒருமுறை பயன் படுத்தும் காகிதத்தை உபயோகப் படுத்துதல், உடல் நிலை சரியில் லாமல் இருந்தால் பள்ளிக்கு வராமல் இருப்பது, பொது இடத் தில் கூடுவதை தவிர்த்தல் ஆகிய வற்றை எடுத்துச் சொல்லி விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும். இவை நோய்த் தடுப்பு மற்றும் நோய் பரவாமல் இருக்க பெரிதும் உதவும்.

இது கோவிட் -19 காய்ச்சல் தாக்குதல் மட்டுமின்றி பல்வேறு தொற்று நோய்களுக்கும் இந்த தடுப்பு முறை பயன்படும்.

எனவே துறை சார்ந்த அதிகாரிகள், ஆசிரியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோவிட்-19 வைரஸ் பரவுதல் காரணமாக அரசுப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய் யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x