Published : 05 Mar 2020 10:06 AM
Last Updated : 05 Mar 2020 10:06 AM

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி கோவையில் வரும் 8-ம் தேதி நடக்கிறது

கோவை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) நடைபெற உள்ளது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறானதயக்கத்தைப் போக்கும் வகையில், இந்தத் தேர்வுகளுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல் லூரி மாணவ, மாணவிகளும், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக் குத் தயாராகும் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி அரங்கில் வரும்ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், காவல் துறை இயக்குநர் (ரயில்வே மற்றும் தீயணைப்புத் துறை)சி.சைலேந்திர பாபு, சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ்,சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்கு நர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி ஆகியோர் கருத்துரையாற்ற உள்ளனர். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணிவரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 9773001174 என்ற செல்போன் எண்ணுக்கு, தங்களது பெயரைக் குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி, பதிவுசெய்து கொள்ளலாம். இந்நிகழ்வின் ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி இணைந்துள்ளது. சிறப்பு சலுகை விலையில்
‘இந்து தமிழ் இயர்புக் 2020'
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் சிறப்புச் சந்தா சலுகை வழங்கப்படும். மேலும், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய 'இந்து தமிழ் இயர்புக் 2020' (800 பக்கங்கள், விலை ரூ. 250), 'கேள்வி நேரம்' ஆகிய புத்தகங்கள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் 10 சதவீத சிறப்பு சலுகை விலையில் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x