Published : 03 Mar 2020 10:56 AM
Last Updated : 03 Mar 2020 10:56 AM

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கும் பொதுத் தேர்வு பணி- 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி பாதிப்பு

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வுப் பணி வழங்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 4-ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 23-ம் தேதியும் தொடங்குகின்றன.

பிளஸ் 2 தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக முதுநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பத்தாம் வகுப்புத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி வழங்கப்படவில்லை. ஆனால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி வழங்கியதால் மாணவர்களின் கல்வி பாதிக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் அ.சங்கர் கூறியதாவது:

ஆறு முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை உள்ளது. அவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரலில் தேர்வு தொடங்கும் நாள் வரை 3-வது பருவத்துக்குரிய பாடம்கற்பிக்கப்படுகிறது. இதில் 40 நாட்களுக்கு தேர்வுப் பணிக்குச் சென்றுவிட்டால் பாடம் கற்பிக்க முடியாது.

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைப் போன்று எங்க ளுக்கும் விலக்கு அளிக்க வேண்டுமென தேர்வுத் துறை இயக்குநரிடம் மனு அளித் தோம். அவரும் இடைநிலை ஆசிரியர்களுக்குத் தேர்வுப் பணி வழங்கக் கூடாது என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆனால், தேவையான முதுநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் இருந்தும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இடைநிலை ஆசிரியர் களுக்குத் தேர்வுப் பணி வழங்கியுள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, இடைநிலை ஆசிரியர்களைத் தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x