சென்னை ஐஐடியில் தேசிய கருத்தரங்கம்: செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதம்

சென்னை ஐஐடியில் தேசிய கருத்தரங்கம்: செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதம்
Updated on
1 min read

சென்னை ஐஐடியில் நடைபெற்ற கடல்சார் பொறியியல் பற்றிய தேசிய கருத்தரங்கின்போது இடம்பெற்ற அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

கடல்சார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் தொடர்பான 2 நாள் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கம் சென்னை ஐஐடியில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடைபெற்றன.

ஐஐடி கடல்சார் பொறியியல் துறையும் கடல்சார் தொழில்நுட்ப சங்கமும் இணைந்த நடத்திய இந்த கருத்தரங்கை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தொடங்கிவைத்தார். முதல் நாள் அன்று கடல்சார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இணையத்தின் பயன்பாடு குறித்த விவாதமும், சென்சார் மற்றும் தகவல் தொகுப்பு, நேவிகேஷன் சேட்டி லைட் தொடர்பான பயிலரங்குகளும் நடைபெற்றன.

2-வது நாளில் கடல்சார் தொழில் நுட்பம் தொடர்பான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், சென்னை மற்றும் மதுரையில் இருந்து 9 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in