Published : 02 Mar 2020 16:03 pm

Updated : 02 Mar 2020 16:03 pm

 

Published : 02 Mar 2020 04:03 PM
Last Updated : 02 Mar 2020 04:03 PM

கேந்திரிய வித்யாலயா மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்குகிறது

kvs-admission-2020-kendriya-vidyalaya-class-1-admission-to-begin-soon

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 1-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதற்கான சேர்க்கை மட்டும் ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. 2-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலான (11-ம் வகுப்பு தவிர்த்து) வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கியது. இந்த வகுப்புகளுக்கு நேரடியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த 10 நாட்களுக்குள் 11-ம் வகுப்புக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு 1-ம் வகுப்பு மாணவர்களுக்கான விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிவுப் பணிகள் முடிந்த பிறகு, கேந்திரிய வித்யாலயா சங்கதன் இணையதளத்தில் முதல் சேர்க்கைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து இடங்கள் காலியாக இருந்தால், இரண்டாவது மற்றும் மூன்றாவது மாணவர் சேர்க்கைப் பட்டியல் வெளியாகும்.

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில், கேந்திரிய வித்யாலயாவில் இடம் கிடைப்பது சவாலான ஒன்றாகும். கடந்த 2019-ம் ஆண்டில், கே.வி. பள்ளிகளில் இருந்த 1 லட்சம் இடங்களுக்கு, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

KVS AdmissionKendriya VidyalayaClass 1கேந்திரிய வித்யாலயாமாணவர் சேர்க்கைகேந்திரிய வித்யாலயா பள்ளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author