Last Updated : 29 Feb, 2020 02:58 PM

 

Published : 29 Feb 2020 02:58 PM
Last Updated : 29 Feb 2020 02:58 PM

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்காக வெளிநாட்டு மொழி கல்வி மையம்: கேரள அரசு தொடங்கியது

பிரதிநிதித்துவப் படம்

திருவனந்தபுரம்

வெளிநாட்டில் வேலை தேடும் கேரள மக்களுக்கு வெளிநாட்டு மொழி இனி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக அயல்மொழிக் கல்வி நிலையம் ஒன்றை கேரள அரசு தொடங்கியுள்ளது.

கேரளாவில் அயல்மொழி பயிற்சிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் மிகவும் குறைவு என்பதால் அம் மாநில அரசே வெளிநாட்டு மொழி கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வரவிருக்கும் மையத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பயிற்சியினை முடிப்பவர்கள் வெற்றிகரமாக 100 சதவீத வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்பதுதான்.

இதுகுறித்து தொழிலாளர் துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இன்று கூறியதாவது:

மாநில அரசின் கீழ் இயங்கிவரும், 'வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு ஆலோசனை'த் (ODEPC)துறையின்கீழ் எர்ணாகுளம் மாவட்டம், அங்கமாலியில் ஒரு மொழி பயிற்சி மையத்தைத் திறக்கத் தயாராக உள்ளது.

இது வெளிநாட்டில் வேலைதேட முயற்சிப்பவர்களுக்காக அவர்களை தகுதிப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு திட்டமாகும். கேரளாவில் வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி அளிக்க மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் இல்லை. இதனை கருத்தில் கொண்டுதான் மாநில அரசு இப்படியொரு மையத்தைத் தொடங்கியுள்ளது.

வெளிநாட்டு மொழிப் பயிற்சிக்கான இந்தக் கல்வி அமையம் கேரள அகாடமி ஃபார் ஸ்கில்ஸ் எக்ஸலன்ஸ் ஆதரவுடன் இன்கெல் வர்த்தக மையத்தில் திறக்கப்படும். மார்ச் 2 ம் தேதி நடைபெறும் விழாவில் தொழிலாளர் மற்றும் கலால் துறை அமைச்சர் டி பி ராமகிருஷ்ணன் இந்த வசதியை திறந்து வைப்பார்.

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வேலை தேடுவோருக்கு முக்கியமாக வெளிநாட்டு மொழிகளில் பயிற்சி அளிக்க இந்த மையம் திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற ஐ.இ.எல்.டி.எஸ் மற்றும் ஓ.இ.டி போன்ற சர்வதேச தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற போதிய ஆங்கில அறிவு தேவை. கூடுதலாக ஜப்பான் மற்றும் ஜெர்மன் மொழிப் பயிற்சிகளும் தேவைப்படுகிறது.

இதற்கான பயிற்சிகளை அளித்து வெளிநாட்டுகளில் வேலை தேடுவோர்களை தகுதிப்படுத்த இந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்படும். திறக்கப்பட உள்ள மையத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், பயிற்சியினை முடிப்பவர்கள் வெற்றிகரமாக 100 சதவீத வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.

இவ்வாறு தொழிலாளர் துறைச் சேர்ந்த உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x