Last Updated : 29 Feb, 2020 12:45 PM

 

Published : 29 Feb 2020 12:45 PM
Last Updated : 29 Feb 2020 12:45 PM

ஓசூரில் இருந்து புதுச்சேரிக்கு கல்விச் சுற்றுலா வந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

ஓசூரில் இருந்து புதுச்சேரிக்கு அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா வந்தனர்.

தமிழக எல்லையான ஓசூர் பேப்பரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 70 மாணவ, மாணவியர்கள் அப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்நாகேஷ் தலைமையில் புதுச்சேரிக்கு ஒரு நாள் கல்விச் சுற்றுலா வந்தனர். ஒசூரில் இருந்து ரயில் மூலம் வந்த மாணவர்களை, புதுச்சேரி ரயில் நிலையத்தில் பிப்டிக் தலைவர் இரா. சிவா எம்எல்ஏ வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர் சோமசுந்தரம், தலைமை ஆசிரியர்கள் நெடுஞ்செழியன், பழநி, பிஆர்டிசி பாஸ்கர், சண்முகம், பாலு, சந்திசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

புதுச்சேரிக்கு கல்விச் சுற்றுலா வந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் பாரதியார் பல்கலைக்கூடம், மியூசியம், அரவிந்தர் ஆசிரமம், அரிக்கன்மேடு, ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு, அவைகளின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்துக் குறிப்பெடுக்க உள்ளனர்.

கல்விச் சுற்றுலா மூலம் மாணவர்களிடையே கலாச்சார, பண்பாட்டுக் கூறுகள் வளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x