Published : 29 Feb 2020 07:28 AM
Last Updated : 29 Feb 2020 07:28 AM

‘அறிவியல் விநாடி வினா - 2020’- இறுதிச்சுற்று போட்டிக்கு 3 பள்ளிகள் தேர்வு

எல்.ஐ.சி. உடன் இணைந்து இந்தோ ரஷ்யன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அன்ட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய ‘அறிவியல் விநாடி வினா-2020’ போட்டியில் இறுதிச்சுற்றுக்கு 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்ற இப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்றன. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரியைச் சேர்ந்த 6 முதல் 8-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவ – மாணவிகள் இக் குழுக்களில் இடம் பெற்றிருந் தனர்.

இந்நிகழ்ச்சியில், தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக் அவ்தேவ் நிக்கோலியேவிச், இந்தோ ரஷ்யன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொதுச்செயலாளர் பி.தங்கப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எல்ஐசி உதவி கிளை மேலாளர் ஐ.செந்தில், AMW VACAY சீஇஓ அருண் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். விநாடி வினா போட்டிகளை குவிஸ் மாஸ்டர் அரவிந்த் ராஜீவ், அஜய் கிருஷ்ணன் இருவரும் ஒருங் கிணைத்தனர்.

இப்போட்டியில் சென்னை தி.நகர் பத்மசேஷாத்ரி பாலபவன், புதுச்சேரி அமலோர்பவம் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் ஓலோஜி டெக் ஸ்கூல் ஆகிய 3 பள்ளிகள் மாநில அளவில் நடைபெறும் இறுதிச் சுற்று போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.

விரைவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகள் ரஷ்ய விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியை UNIBIC, AMW VACAY, REPUTE ஆகியவை இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x