Published : 28 Feb 2020 09:44 AM
Last Updated : 28 Feb 2020 09:44 AM

செய்திகள் சில வரிகளில் - பதற்றப்படாமல் தேர்வு எழுதுங்கள்: மம்தா அறிவுரை

ஐசிஎஸ்சி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது.

மார்ச் 30-ம் தேதி வரை நடக்கும் இந்தத் தேர்வில் கொல்கத்தா மாநிலத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள், தேர்வை பதற்றப்படாமல் எழுதுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.

குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.2.4 லட்சம் கோடி

காந்திநகர்

குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.28 ஆயிரம் கோடி உயர்ந்து, தற்போது ரூ.2.4 லட்சம் கோடியாக உள்ளது.

குஜராத் மாநில சட்டப்பேரவையில் எழுப்பட்ட கேள்விக்கு மாநில நிதி அமைச்சர் நிதின் பட்டேல் கூறியது:

குஜராத் மாநிலத்தின் கடன் சுமை தற்போது ரூ.2.40 லட்சம் கோடியாக உள்ளது. 2018-19-ம்ஆண்டில் ரூ.28,061 கோடி கடன் அதிகரித்துள்ளது.

இந்த கடனுக்கு வட்டித் தொகையாக 2018-19-ல் ரூ.18,124 கோடி வட்டியும், ரூ.15,440 கோடி அசல் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x