Published : 28 Feb 2020 09:00 AM
Last Updated : 28 Feb 2020 09:00 AM

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.91 ஆயிரம் நிவாரணம்: ஹாங்காங் அரசு அறிவிப்பு

ஹாங்காங்

கோவிட் -19 வைரஸால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்த ஹாங்காங் மக்களுக்கு தலா ரூ.91 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் கோவிட் -19 என்ற புதிய கரோனா வைரஸ் பரவியது. கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சீனாவில் இதுவரை 2,744 பேர் உயிரிழந்துள்ளனர்.

வூஹான் நகரில் இருந்து ஹாங்காங், தென் கொரியா, ஈரான், ஜப்பான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் கரோனா வைரஸ் பரவி இருந்தது. சீனாவின் மிக அருகிலேயே இருக்கும் ஹாங்காங்கில் கரோனா பாதிப்பு அதிகமானதால் பொது மக்கள் வெளியேநடமாட அரசு தடை விதித்தது. இதனால், வர்த்தகர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்தனர்.

இதனை ஓரளவு ஈடுகட்டும் நோக்கில், ஹாங்காங் குடிமக்களுக்கு நிவாரணத் தொகையாக 10 ஆயிரம்ஹாங்காங் டாலர் (ரூ.91 ஆயிரம்) ரொக்கம் கொடுக்க அரசு முன்வந்துள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் நிதி அமைச்சக செயலாளர் பால் சான் கூறுகையில், “கரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னதாக, ஹாங்காங் முழுவதும் நடந்த போராட்டங்களால் பொது மக்கள் கடுமையாக பாதிப்படைந்தனர். எனவே, சுமார் 70 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு நிவாரணத்தொகை வழங்க ரூ. 65 ஆயிரம் கோடி (71 பில்லியன் ஹாங்காங் டாலர் )ஒதுக்கப்பட்டுள்ளது” என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x